"எங்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" - நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
பதிவு: ஆகஸ்ட் 24, 2018, 09:29 PM
சென்னை- மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் மகளிர் மேல் நிலைப்பள்ளியின் 150 - வது ஆண்டு விழாவில், நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் ஐ.ஏ. எஸ் - ஐ பி எஸ் அதிகாரிகளின் பங்களிப்பு குறைந்து வருவதால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டார். பாதுகாப்பு துறையில், பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு துறை பணிக்கு,  பெண்கள் பெருமளவில் வருமாறு அழைப்பு விடுத்தார். இதே மேடையில் பேசிய கே.ஏ. செங்கோட்டையன், மத்திய பாதுகாப்பு அமைச்சர், எங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 


 
மேடையில் பேசியது என்ன..? - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம்

பின்னர், விழா முடிந்த பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 
மேடையில் பேசியது என்ன என்பது குறித்து, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்