திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் - திமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம்
பதிவு: ஆகஸ்ட் 24, 2018, 09:55 AM
சென்னை அண்ணா அறிவாலயத்தில் , திமுக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதில், ஓய்வின்றி உழைக்கக்கூடிய  ஸ்டாலின், திமுக தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று மகளிரணி விரும்புவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.