காங்கிரஸ் பொருளாளராக அகமது படேல் நியமனம்
பதிவு: ஆகஸ்ட் 21, 2018, 09:23 PM
காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் சார்பில், அசோக் கெலாட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுவரை பொருளாளராக பணியாற்றி வந்த மோதிலால் வோராவுக்கு காங்கிரஸ் நிர்வாக பொதுச்செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கி, கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் வெளியுறவு விவகாரத்துறை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மாவும், அசாம் தவிர்த்த வட கிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக லுஜின் ஹோ பெலாரியோவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் சபாநாயகர் மீரா குமார், காங்கிரஸ் செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.