அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாள் நியமனம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில்,லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாளை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-10 12:56 GMT
* பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு  தொடர்ந்திருந்தார். 

* இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்ய நாராயணன் - ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

* மேலும், வழக்கின் இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தனர். வழக்கு சம்பந்தமாக அதிகப்படியான சாட்சியங்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கால அவகாசம் கோரினர்.அதையடுத்து வழக்கின் நிலை அறிக்கையை அக்டோபர் 8-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்