மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்வது அவசியம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆந்திர முதலமைச்சர் சந்தரபாபு நாயுடு பேசியுள்ளார்.

Update: 2018-08-05 04:17 GMT
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,  ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு பதிலாக, மற்ற 11 மாநிலங்களுக்கு, மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கி வருவதாக குற்றம்சாட்டினார். சிலர், தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு பயந்து, மத்திய அரசிடம் அடிபணிந்துள்ளதாகவும், தான் அவ்வாறு அடிபணிய மாட்டேன் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

ஒரு நாட்டின் மக்கள் தொகைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிய தொடர்பு இருப்பதாக தெரிவித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் மக்கள் தொகை விகிதம் சரியான முறையில் உள்ளதாக கூறினார். இதேநிலை தொடர்ந்தால்,  வருங்காலத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து,  இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால், அனைவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சந்திர பாபு நாயுடு வலியுறுத்தினார்.

சந்திரபாபு நாயுடுவை நோக்கி பாய்ந்த மாணவர்கள் - தடுத்து நிறுத்தி கைது செய்த போலீஸ்

மேடையில் பேசிக்கொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவை நோக்கி பாய்ந்து சென்ற இரண்டு மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் அகில இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்