திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு படையெடுத்த பிரபலங்கள்...
கருணாநிதி உடல் நலம் குறித்து நேரில் விசாரித்த அரசிய கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்...
திமுக தலைவர் கருணாநிதிக்கு 24 மணி நேரமும், வீட்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - ஸ்டாலின்
இதனிடையே, கருணாநிதி உடல் நலம் குறித்து நேரில் விசாரித்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது கேட்கலாம்...
கருணாநிதியின் உடல்நிலை சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்; விரைவில் பூரண உடல் நலத்துடன் திரும்புவார் - தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர்
கருணாநிதி பூரண குணம் பெற்று திரும்ப வேண்டும் - வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்
தமிழ் உள்ளவரை கலைஞர் வாழ்வார் - பாண்டியன், இந்திய கம்யூ.
கலைஞர் கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ்ந்து சேவை செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
50 ஆண்டுகள் கடந்த அரசியல் தலைவர் கருணாநிதி - வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி
பயப்படும் அளவிற்கு பிரச்சினை இல்லை - அபுபக்கர், எம்.எல்.ஏ
கருணாநிதி நூறு ஆண்டுகள் வாழ்வார் - எஸ்ரா சற்குணம்
கருணாநிதி தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர் - இயக்குனர் பாரதிராஜா புகழாரம்
கலைஞர் பல்லாண்டு வாழ வேண்டும் - எஸ்.வி.சேகர்
கலைஞர் மட்டும் தான் ஒரே தலைவர் - கண் கலங்கிய டி.ராஜேந்தர்