18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நாளை, சபாநாயகர் தரப்பு வாதம் துவக்கம்

டி.டி.வி. தினகரன் ஆதரவு, 18 எம். எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், நீதிபதி சத்யநாராயணன், 2 - வது நாளாக விசாரணை நடத்தினார்.

Update: 2018-07-24 14:49 GMT
டி.டி.வி. தினகரன் ஆதரவு, 18 எம். எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், 
நீதிபதி சத்யநாராயணன், 2 - வது நாளாக விசாரணை நடத்தினார்.
தேர்தல் ஆணையத்தில், கட்சி விவகாரம் நிலுவையில் இருந்தபோது, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு தவறு என வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், இந்த 18 பேரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் என்று கூறி தான், புகார் கொடுத்ததாக தெரிவித்தார். இதனை, உண்மை என வழக்கறிஞர் பி.எஸ். ராமனும் ஒப்புக்கொண்டார். 18 எம்.எல்ஏக்களுக்கு எதிராக கொறடா கொடுத்த புகாரை ஏற்று, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது, செல்லாது என்று வழக்கறிஞர்கள் மோகன் பராசரனும், பி. எஸ். ராமனும் வாதிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்