கடலூரில் அண்ணா சிலை சேதம் - தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம்
பதிவு: ஜூன் 25, 2018, 04:51 PM
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம்  மணிக்கூண்டு அருகில் உள்ள  அண்ணா சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி தி.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் அண்ணா சிலையின் ஒரு கை உடைக்கப்பட்டு மற்றொரு கை தேசப்படுத்தபட்ட நிலையில் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே , மர்ம நபர்களை கைது செய்ய கோரி தி.மு.க சார்பில் முன்னாள் ஏம்.எல்.ஏ புகழேந்தி தலைமையில் கடலூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.