ஆன்மிக அரசியல் என்றால் என்ன? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மிக அரசியல் அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மிக அரசியல் - நடிகர் சத்யராஜ்

Update: 2018-06-05 03:15 GMT
அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மிக அரசியல் என நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியில் 95 வது பிறந்த நாள் நிகழ்ச்சி வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.  இதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி மற்றும்  மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய சத்யராஜ், இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மிக அரசியல், அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மிக அரசியல் என விளக்கம் அளித்தார்.   

Tags:    

மேலும் செய்திகள்