நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள் - ஆராய்ச்சியாளர் சொன்ன அதிர்ச்சி கரணம்

Update: 2024-04-25 11:02 GMT

ஆஸ்திரேலியாவின் தென் மேற்கு பகுதியில், கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள டோபி இன்லெட் என்னும் பகுதியில், 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இவற்றில், 26 திமிங்கலங்கள் கரையில் மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டன. மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு, கடலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு திமிங்கலம் கரையில் மாட்டிக்கொண்ட நிலையில், மற்ற திமிங்கலமும் வரிசையாக வந்து சிக்கியிருக்கலாம் என அந்நாட்டு, கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்