வேகமாக வந்த வாகனங்களை மடக்கிய போலீசார்... சிக்கிய கும்பல்... காத்திருந்த ஷாக்..!

Update: 2023-10-14 07:31 GMT

ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பேர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

vovt

ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, சித்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேணிகுண்டா செக்போஸ்ட், பாக்கர பேட்டை, ரயில்வே கோடூர் ஆகிய ஊர்களில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் செம்மரங்களை வெட்டி கடத்திய தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பேர் உட்பட 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 செம்மரக்கட்டைகள், இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு மினி லாரி மற்றும் செம்மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்