காதலுக்கு 'NO' சொன்ன சிறுமி..தாயுடன் செல்லும் போது வெறியை தீர்த்த இளைஞர்
மகாராஷ்ட்ராவில், காதலிக்க மறுத்த சிறுமியை இளைஞர் கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.மகாராஷ்ட்ர மாநிலம் தானே மாவட்டம், கல்யாண் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஆதித்ய காம்ப்ளே, அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியிடம், தனது காதலை ஏற்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை அந்த சிறுமி நிராகரித்துள்ளார். இந்நிலையில், அந்தச் சிறுமி ட்யூஷன் முடிந்து தனது தாயாருடன் இரவு வீடு திரும்பினார். படிக்கட்டுகளில் ஏறும்போது பின்னால் வந்த இளைஞர், சிறுமியின் தாயாரை ஒருபுறம் தள்ளிவிட்டு, சிறுமியை கத்தியால் பலமுறை சரமாரியாக குத்தினார். இதையடுத்து படுகாயங்களுடன் மாடிப்படியில் இருந்து சரிந்த சிறுமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோட முயன்ற ஆதித்ய காம்ப்ளேவை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இளைஞரிடம் கத்தியை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.