ஏர்கன் துப்பாக்கியால் தம்பியை கொன்ற அண்ணன்

Update: 2023-09-29 14:55 GMT

கேரளாவில் வீட்டின் முன்பு பைக் நிறுத்துவது தொடர்பாக சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.கேரளா மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா எட்டயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப்புக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அனுஜன் தாமஸ், கேரள உயர்நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி பால்சன். இருவரும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் முன்பு பைக் நிறுத்துவது தொடர்பாக அண்ணன், தம்பிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தாமஸ் பைக்கை, பால்சன் அடித்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அனுஜன் தாமஸ், வீட்டில் இருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து பால்சனை சுட்டுள்ளார். இதில் பால்சன் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாமஸை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்