குஜராத்தில் உள்ள சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரத் விமான நிலையம் சர்வதேச பயணிகளுக்கான நுழைவாயிலாக உருவெடுப்பது மட்டுமின்றி, செழித்து வரும் வைரம் மற்றும் ஜவுளி தொழில்களுக்கு தடையற்ற ஏற்றுமதி-இறக்குமதி செயல்பாடுகளை எளிதாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.