ஆண்டுக்கு ரூ.20,000 கோடி நஷ்டம் - சிபிஎஃப்சி அதிரடி

Update: 2023-11-04 11:31 GMT

உரிமம் இல்லாத உள்ளடக்கத்தைக் கொண்ட இணையதளம், செயலி, இணைய இணைப்புகளைத் தடை செய்து உத்தரவிட மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பைரசி எனப்படும் உரிமம் இல்லாத திருட்டு வெளியீடுகளால் திரைத்துறை ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து திருட்டு வெளியீடுகளைத் தடுக்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக, இந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஒளிப்பதிவு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் குறித்துப் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், அசல் பதிப்புரிமை வைத்திருப்பவர் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நபரும் திருட்டு உள்ளடக்கத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்ற பிறகு, திருட்டு உள்ளடக்கத்தைக் கொண்ட இணைய இணைப்புகளை 48 மணி நேரத்திற்குள் அந்த டிஜிட்டல் தளம் அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்