பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? - கர்ப்பிணி வயிற்றை கிழித்த கணவன்.. நினைத்து பார்க்கவே நடுங்கவிட்ட கோரம்

Update: 2024-05-25 03:32 GMT

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அரிவளால் கிழித்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள், பன்னா லால், அனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஆறாவதாக மீண்டும் கருவுற்றார் அனிதா. 6வது குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பதற்காக, பன்னாலால் , கர்ப்பிணி அனிதாவிடம் சண்டையிட்டு வந்திருந்தார். இந்த நிலையில், பிறக்கப்போவது பெண் குழந்தைதான் என உள்ளுர் பூசாரி கூறினார். எதற்கும் அனிதாவின் வயிற்றை அரிவாளால் கிழித்து பார்த்துவிடுவதென முடிவு செய்தார் பன்னா லால். இதை அறிந்த அனிதா தப்பிக்க முயன்றபோது, அனிதாவின் வயிறு கிழிக்கப்பட்டது. அந்த நேரத்தில், அனிதாவின் சகோதரர் அங்கு வந்த நிலையில், உடனடியாக அவரை மீட்டு டெல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பின், அனிதா காப்பாற்றப்பட்டார். ஆனால் அவரது வயிற்றில் இருந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் கடந்த 2020 ம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், பன்னா லால் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. அனிதா தனக்கு நடந்த கொடுமையை விவரித்த நிலையில், பன்னா லாலிற்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்