பூகம்பமாய் வெடித்த காவிரி.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - "பறந்த 144தடை" - பரபரப்பில் கர்நாடகா

Update: 2023-09-26 02:59 GMT

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரித்து, கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் உட்பட வணிகர் சங்கத்தினரும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில பாஜகவுப் போராட்டத்தை ஆதரிப்பதாக, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பெங்களூரில் காந்தி சிலை முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்துவார்கள் என்று சி.டி.ரவி. கூறியுள்ளார். பந்த் காரணமாக பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பெங்களூரில் போராட்டம் நடத்தவதற்கு அனுமதி மறுத்துள்ள காவல்துறை, 144 தடை ஆணை பிறப்பித்துள்ளது. தடை மீறி கூட்டம் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்