மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் பதிவானதா? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்

Update: 2024-04-18 12:26 GMT

பதிவான வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரும் பொதுநல மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின்போது, கேரளத்தின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதார‌ர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்கிடம் தெரிவித்தனர். மேலும், தேர்தல் முறையில் புனித‌த்தன்மை காக்கப்பட வேண்டும் என்றும், தான் விரும்புவதற்கு மாறாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற அச்ச உணர்வு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் கூறினர். அதே நேரத்தில், கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு அதிக வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்