பசு பாதுகாவலரை துப்பாக்கி முனையில் துரத்திப் பிடித்த போலீஸ் - பரபரப்பு சிசிடிவி காட்சி

Update: 2023-08-16 09:36 GMT

அரியானாவில் பசு பாதுகாவலர் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை போலீசார் துரத்திச் சென்று கைது செய்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. அரியானாவில் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, கைது நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறனர். இந்நிலையில், நூ மாவட்டத்தில் பசு பாதுகாவலரைச் சேர்ந்த பிட்டு பஜ்ரங்கி இருக்கும் இடத்திற்கு சென்ற ஃபரிதாபாத் போலீசார், துப்பாக்கிகளுடன் துரத்திச் சென்று கைது செய்தனர். திடீரென குடியிருப்புப் பகுதிக்குள் ஏராளமான போலீசார் துப்பாக்கியுடன் துரத்திச் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்