தேசிய நெடுஞ்சாலையில் சிக்கிய ஆட்டோ... போலீசாருக்கு ஷாக் கொடுத்த சம்பவம்

Update: 2023-11-23 14:02 GMT

கேரள மாநிலம் இடுக்கியில், சாலையோர இரும்பு தடுப்புகளில் உள்ள கிராஷ் பாரியர் தூண்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கொட்டராக்கரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, கிராஷ் பாரியர் இரும்புத்தூண்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆட்டோவில் இருந்த பீருமேடு லட்சம் காலனியை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்