புல் அறுக்கச் சென்ற விவசாயி.. ஆற்றங்கரையில் கேட்ட அலறல் சத்தம் - நேரில் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி!
கேரளாவில் ஆற்றங்கரையில் மாட்டுக்கு புல் அறுக்கச் சென்ற விவசாயி, முதலையால் கடித்து இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் தேடி வருகின்றனர். வயநாடு மீனங்காடி முரணி கீழணைக்கல் பகுதியை சேர்ந்த விவசாயி சுரேந்திரன், அங்குள்ள குண்டுவயல் ஆற்றங்கரையில் புல் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், நேரில் சென்றனர். சுரேந்திரனை முதலை இழுத்து சென்றதா? அல்லது வேறு வனவிலங்கு இழுத்து சென்றதா என தெரியாத நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.