மகாராஷ்ட்ர மாநிலம் தானேயில், பழமையான இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். புனே பிவாண்டி பகுதியில், 45 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதையடுத்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.