பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு - பட்ஜெட்டின் 2ம் கட்டம் அடுத்த மாதம் தொடங்கும்
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து இரு அவைகளும் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.;
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து இரு அவைகளும் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதி அமைசர் நிர்மலா சீதாரமன் பேசினார். அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், மாநிலங்களவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 14ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். அன்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மக்களவையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.