இந்திய விமானப்படை தினம்: விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
விமானப்படை தினமான இன்று விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
விமானப்படை தினமான இன்று விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமானப்படை வீரர்களின் தைரியம் மற்றும் விடாமுயற்சியை குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில் நாட்டை பாதுகாப்பதிலும், சவால்களை எதிர்கொள்ளும் தருணங்களிலும் மனிதாபிமான உணர்வு மூலம் விமானப்படை வீரர்கள் தங்களை வேறுப்படுத்தி காட்டுவதாக புகழ்ந்துள்ளார்.
இந்திய விமானப்படையின் 89வது தினம் - விமானப்படை வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து
இந்திய விமானப்படையின் 89வது தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விமானப்படை வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் விமானப்படை சாகசத்தின் 2 நிமிட வீடியோவை பதிவிட்ட அவர், விமானப்படை வீரர்கள் சவால்களை அமைதி மற்றும் நெகிழ்ச்சியுடன் கையாள்வதற்காகவும், நாட்டின் பாதுகாப்பில் உறுதியாக இருப்பதற்காகவும் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.