திருப்பதியில் கால் பதித்தது "ஜட்டி கேங்க்" - வங்கி ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளை
திருப்பதியில் கால் பதித்தது "ஜட்டி கேங்க்" - வங்கி ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளை;
திருப்பதியில் கால் பதித்தது "ஜட்டி கேங்க்" - வங்கி ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளை
மும்பை, ஹைதராபாத் நகர்களில் கொள்ளையில் ஈடுபட்டு போலீசாருக்கு போக்கு காட்டிய ஜட்டி கேங்க், தற்போது திருப்பதியில் கைவரிசை காட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு உடல் முழுவதும் எண்ணெய் பூசிய படி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஒன்று மும்பை , ஐதராபாத் நகர்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. ஜட்டி கேங்க் என அழைக்கப்படும் இந்த கும்பல், திருப்பதியில் உள்ள அத்தி ராம்ஜி நகரிலுள்ள பேங்க் ஊழியரான சுரேஷ் என்பவர் வீட்டில் கைவரிசை காட்டியுள்ளது. விடுமுறை காரணமாக சுரேஷ் தன் சொந்த ஊரான சந்திரிகிரிக்கு சென்றுவிடவே, காலை வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க , வெள்ளி நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கொள்ளையடிக்கும் ஜட்டி கேங்க் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. மும்பை, ஐதராபாத் நகர போலீசாரை தொடர்ந்து ஆந்திர போலீசாரும் ஜட்டி கேங்கை பிடிக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளனர்.