சுகாதாரத் துறை ஊழியர்கள் நடனம் - பழங்குடியின மக்கள் உற்சாகம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடி அகளி பஞ்சாயத்து பகுதியில் பழங்குடியின மக்களுக்கு கேரள சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்காக சென்றிருந்தனர்.

Update: 2021-06-13 07:49 GMT
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடி அகளி பஞ்சாயத்து பகுதியில் பழங்குடியின மக்களுக்கு கேரள சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்காக சென்றிருந்தனர். பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் குறையவில்லை என்றும் தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் எழுந்த புகாரைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தனி கவனம் செலுத்தி அங்கு வாகனங்களில் சென்று சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பழங்குடியின மக்களின் பாடலுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் நடனமாடியது பழங்குடியின மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது

Tags:    

மேலும் செய்திகள்