கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்கள்;குடும்பத்தினருக்கு உடனடி ஓய்வூதியம் - மத்திய அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-09 02:03 GMT
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியம் வழங்க  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா காரணமாக உயிரிழந்த அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர், குடும்ப ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள், குடும்ப ஓய்வூதியம் வழங்கும் பணி தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
இது குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பணியில் இருக்கும் அரசு ஊழியர் இறந்தால், இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு, குடும்ப ஓய்வூதியம் கோரும்போது, ஒரு மாதத்துக்குள் குடும்ப ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும்படி அனைத்து துறை செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்