சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி - 525 தன்னார்வலர்கள் பங்கேற்பு

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சிறார்களுக்கான கொரொனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கி உள்ளது.

Update: 2021-06-03 06:52 GMT
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சிறார்களுக்கான கொரொனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கி உள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 3 முதல் 18 வயது வரையிலான சிறார்களின் உடலில் செலுத்துவதற்கான கோவெக்ஸின்  தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.இதன் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில்,  2 மற்றும் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு,கடந்த மாதம் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்தது. இந்நிலையில் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இரண்டாம் கட்ட மருத்துவ சோதனை தொடங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வரும் திங்கள் அன்று தடுப்பூசி மீதான மருத்துவ சோதனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 525 தன்னார்வலர்களிடம் மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்