கும்பமேளா "சூப்பர் ஸ்ப்ரெட்டரா"? நியாயமற்றது என மறுக்கும் அதிகாரி - கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி விளக்கம்
ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாதான் கொரோனா பரவல் அதிகரிக்கக் காரணம் எனக்கூறுவது நியாயமற்றது என கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் குஞ்சியால் தெரிவித்துள்ளார்.;
கும்பமேளா "சூப்பர் ஸ்ப்ரெட்டரா"? நியாயமற்றது என மறுக்கும் அதிகாரி - கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி விளக்கம்
ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாதான் கொரோனா பரவல் அதிகரிக்கக் காரணம் எனக்கூறுவது நியாயமற்றது என கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் குஞ்சியால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புள்ளி விவரங்களின் படி, ஜனவரி 1 முதல் ஏப்ரம் 30ம் தேதி வரை ஹரித்துவாரில் மட்டும் 8 லட்சத்து 91 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அதில் ஆயிரத்து 954 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 16 ஆயிரம் போலீசாரில், ஏப்ரல் 30 வரை 88 போலீசாருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அதனால் கொரோனாவை "சூப்பர் ஸ்ப்ரெட்டர்" எனக்கூறுவது நியாயமற்றது என குறிப்பிட்டார்.