மரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட யானை; வனத்துறை முயற்சியால் பத்திரமாக விடுவிப்பு

கேரள மாநிலம் வயநாடு அருகே, பலா மரங்களுக்கு இடையில் கால் சிக்கிய யானை வனத்துறையினரின் போராட்டத்தால் விடுவிக்கப்பட்டது.

Update: 2021-05-16 05:22 GMT
கேரள மாநிலம் வயநாடு அருகே, பலா மரங்களுக்கு இடையில் கால் சிக்கிய யானை வனத்துறையினரின் போராட்டத்தால் விடுவிக்கப்பட்டது. பலா பழங்களை திண்பதற்காக யானைக் கூட்டம் ஒன்று மேப்பாடி பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது. அப்போது ஒரு பெண் யானையின் கால், இரண்டு பலா மரங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், மற்ற யானைகளை விரட்டி விட்டு, பெண் யானையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். மயக்க ஊசி செலுத்தாமல் யானையின் கவனத்தை திசை திருப்பி, சில மணிநேரத்தில் யானையை பத்திரமாக விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்