மராத்தா சமூகம்- 16% இட ஓதுக்கீடு ரத்து... உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது

Update: 2021-05-05 08:00 GMT
மராத்தா சமூகம்- 16% இட ஓதுக்கீடு ரத்து... உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்றது.அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது,50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறி மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில்  16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதில் போதுமான காரணம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்,மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்ட 16 சதவீதம் இடஒதுக்கீடு அரசமைப்பு சட்டத்துக்கு முரணானது என்றும் மராத்தா சமூகத்தினர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும்பின்தங்கியவர்கள் என அறிவித்து இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்
Tags:    

மேலும் செய்திகள்