எளிமையாக நடந்து முடிந்த மன்னர் "தர்பார்"

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான, சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

Update: 2020-10-26 12:51 GMT
கொரோனா அச்சம் காரணமாக மிக எளிமையாக தசரா விழா கொண்டாட்டம் துவங்கி, நடைபெற்று வந்தது. கடந்த 400 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், 
சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 
பார்வையாளர்களுக்கு அரண்மனை வளாகத்திற்குள் அனுமதி தரப்படவில்லை. இன்று நடைபெற்ற சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்தது. சுமார் 7 கி.மீ. செல்ல வேண்டிய ஊர்வலம் அரை கி.மீ.க்குள் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில், முதலமைச்சர் எடியூரப்பா  மன்னர் குடும்பத்தினர் பங்கேற்றனர். 300க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மன்னரின் தர்பார் நிகழ்ச்சியும், எளிமையாக நடந்து முடிந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்