"பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க வேண்டும்" - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை

மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார்.

Update: 2020-09-07 13:04 GMT
மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் தொலைபேசியில் பேசிய அவர், இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில் மதிய உணவு திட்டத்தில் பாலை சேர்ப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு பரிந்துரைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என வெங்கையா நாயுடுவிடம், ஸ்மிருதி இரானி உறுதியளித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்