கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி - எல்லையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சி முறியடிப்பு

கிழக்கு லடாக்கில் மீண்டும் அத்துமீற முயன்ற சீன ராணுவம் விரட்டி அடிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2020-08-31 08:59 GMT
ராணுவ மற்றும் தூதரக அளவிலான பேச்சுவார்த்தையில் எட்டிய ஒப்பந்தத்தை மீறும் வகையில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவம்,எல்லையை மாற்றியமைக்கும் வகையில் தன்னிச்சையாக சனிக்கிழமை இரவு படைகளை நகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த முயற்சியை வெற்றிக்கரமாக முறியடித்து உள்ளதாக ராணு செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார். பான்காங்க் டெசோ லேக் தென்கரையில் நடந்த சீனாவின் இந்த  முயற்சியை தடுத்துள்ளதோடு, நமது வீரர்களின் இருப்பை அதிகரித்து உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட விரும்பும் அதேநேரத்தில், சீன படைகளின் எந்தவித நகர்வுகளையும் தடுத்து நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கமாண்டர்கள் மட்டத்திலான கொடி சந்திப்பு இது தொடர்பாக சுசுல் நகரில் நடைபெற்று வருவதாகவும் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்