பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.;

Update: 2020-05-26 07:50 GMT
கொல்லத்தில், நகை, சொத்துக்காக, தூங்கிக் கொண்டிருந்த மனைவி உத்ராவை, பாம்புவிட்டு கணவன் சூரஜ் கொலை செய்தார். அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகார் குறித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவரின் கணவர் தான் திட்டமிட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, சூரஜை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கொலையாளி சூரஜை சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பாம்பு எடுத்து வந்த டப்பாவை அடையாளம் காட்டிய சூரஜ், கொலை நடந்த அறையில் நடித்துக்காட்டி விளக்கம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்