புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மாணவர்கள் மொட்டை அடித்து நூதன போராட்டம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அண்ணா சிலை பகுதியில் மாணவர் கூட்டமைப்பினர் மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அண்ணா சிலை பகுதியில் மாணவர் கூட்டமைப்பினர் மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரிக்கு நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு, திரும்ப பெறவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.