லிங்கன்நமக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள லிங்கன்நமக்கி அணை, தொடர் கனமழையால் அதன் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-09-03 05:22 GMT
கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள லிங்கன்நமக்கி அணை, தொடர் கனமழையால் அதன் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. ஷரவாதி ஆற்றின் குறுக்கே நீர்மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட இந்த அணையின் உயரம் ஆயிரத்து 819 அடியாகும். தற்போது அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், 3 மதகுகள் வழியாக அணைக்கு வரும் உபரி நீர் 25 ஆயிரம் கன அடியும் அதிகாலை 2 மணி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறு சிவமோகா மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்