தேசிய சுற்றுலா மாநாடு : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு
டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய சுற்றுலா மாநாட்டில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டார்.;
டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய சுற்றுலா மாநாட்டில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டார். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சுற்றலா, கலாச்சாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.