கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு - தீவிரவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை
மத்திய அரசு கடற்படை தளங்களில் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.;
இந்திய கடலோரப்பகுதிகளில் இந்திய கடலோரப்பகுதிகளில், தீவிரவாதிகளின் தாக்குதல்களை தடுக்க, மத்திய அரசு கடற்படை தளங்களில் போர்க்கப்பல்களை, நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தான் நாட்டில் இருந்து தீவிரவாதிகள், ஊடுருவலாம் என்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில், பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.