370 பிரிவு ரத்து - அரசாணை வெளியிட்ட சட்ட அமைச்சகம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின், ஒப்புதலுடன் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட அரசாணையை, மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Update: 2019-08-07 20:10 GMT
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்திற்கான, 370 பிரிவு, 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு, மக்களவையிலும், இந்த மசோதா மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 370 பிரிவு, 35 ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை கெஜட்டில், மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிற மாநிலங்களில் என்னென்ன சட்டங்கள் அமலில் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்கும் உடனடியாக அமலுக்கு வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்