மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ்குமார் நியமனம்
மத்திய நிதித்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜிவ்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.;
மத்திய நிதித்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜிவ்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குமுன் மத்திய நிதித்துறை செயலாளராக சுபாஷ் சந்திரா கார்க் இருந்தார். இவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சுபாஷ் சந்திரா கார்க் விருப்ப ஓய்வு கேட்டுள்ள நிலையில், மத்திய நிதித்துறை செயலாளராக ராஜிவ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்குமுன் நிதி சேவை செயலாளராக இருந்த ராஜிவ்குமார், தற்போது நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.