பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம் - இடைக்கால அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்கிறார்
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது;
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளிலும் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுவார்.
சிகிச்சைக்கான அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜெட்லியின் நிதி துறையை கூடுதலாக கவனித்து வரும் பியூஷ் கோயல், இந்த கூட்டதொடரில் இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டத்தொடர் என்பதால் இடைக்கால பட்ஜெட்டில், பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக முக்கிய பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.