சித்தகங்கா மடத்தின் தலைமை குருக்கள் சிவக்குமார் சுவாமி மரணம்

கர்நாடகாவில் மிகப்பழமையான சித்தகங்க மடத்தின் தலைமை குருக்கள் சிவக்குமார் காலமானார்.

Update: 2019-01-21 11:09 GMT
கர்நாடாக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் பழமையான சித்தகங்கா மடம் உள்ளது. அந்த மடத்தின் தலைமை குருக்களாக இருந்த அவர், 111 வயதைக் கடந்தும் 5 வேளை சிவ பூஜையில் ஈடுபட்டு வந்தார். இதனால், நடமாடும் தெய்வம் என்று அழைக்கப்பட்டவர் சிவக்குமார். லிங்காயத் சமய மடாதிபதியாக இணைந்த பிறகு, மடத்தில் கல்வி புரட்சி செய்தவர். மடத்தின் மூலம், 8 ஆயிரத்து 500 மாணவர்கள் இலவசமாக கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கி பங்கேற்க தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் வரக்கூடும் என்பதால், 14 ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. 10 ரிசர்வ் போலீஸ் பட்டாலியன் பாதுகாப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். மடாதிபதி சிவகுமார் மறைவுக்கு ஒருநாள் அரசு விடுமுறை விடப்படுவதாகவும், 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்