முத்ரா கடன் - ரூ.1.42 லட்சம் கோடி
குறுந்தொழில்களுக்கு கடன் அளிக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது.;
குறுந்தொழில்களுக்கு கடன் அளிக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுந்தொழில் செய்பவர்களின் மேம்பாட்டுக்காகவும், நிதித் தேவைகளுக்காகவும் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும், நுண் கடன் நிறுவனங்களும் கிராமப்புறங்களில் குறுந்தொழில் செய்பவர்களுக்கு கடன் அளித்து வருகின்றன.