ரெயில் விபத்து : உயிரிழப்பு 61 ஆக உயர்வு
ரெயில் விபத்து : உயிரிழப்பு 61 ஆக உயர்வு;
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நேற்றிரவு நிகழ்ந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. நிகழ்விடத்தை,
பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், சித்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
காயம் அடைந்தவர்கள், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை நேரில் பார்த்து, ஆறுதல் கூறிய அம்ரீந்தர் சிங், காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்,.