உலக அளவில் பசி, பட்டினி இல்லாத 119 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 103 வது இடம்

சர்வதேச உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக அளவில் பசி, பட்டினி இல்லாத 119 நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டது.

Update: 2018-10-16 05:37 GMT
* சர்வதேச உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக அளவில் பசி, பட்டினி இல்லாத 119 நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டது. 

* அதில் கடந்த ஆண்டு 100-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது மேலும் 3 இடங்கள் பின்தங்கி 103வது இடத்தில் உள்ளது.

* இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உலக பட்டினி குறியீடு அறிக்கையில் இந்தியாவில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும்

* 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகள் அளவு 54.2 சதவீதத்தில் இருந்து 38.4 சதவீதமாக குறைந்துள்ளது.

* அதேசமயம் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

* பெண்கள் தங்களின் பேறுகாலத்தில் போதுமான சத்துள்ள உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், 

* குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் முறையாகக் கொடுக்காமல் இருப்பதாலும் இந்த வயதுக்கு ஏற்ற எடை இல்லா குழந்தைகள் உருவாக காரணமாகக் கூறப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்