ரபேல் போர் விமான விவகாரம்: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் காங்கிரஸ் மனு

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-09-24 12:22 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா, கபில் சிபல் உள்ளிட்டோர், டெல்லியில் உள்ள மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையர் கே.வி. சவுத்திரியை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். அதில், ரபேல் ஒப்பந்தத்தில் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை விலக்கிவிட்டு, தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், விமானங்களுக்கு கூடுதல் விலை அளிக்கப்பட்டுள்ளதன் மூலம், கருவூலத்துக்கு அரசு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்