அஞ்சலகங்களில் துவக்கப்பட்டுள்ள வங்கி சேவை பற்றிய ஒரு பார்வை

கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வங்கி சேவைகள் எளிதாக கிடைக்க, நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3 ஆயிரத்து 250 கிளைகளில், வங்கி சேவையை செப்டம்பர் 1ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

Update: 2018-09-08 07:30 GMT
கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வங்கி சேவைகள் எளிதாக கிடைக்க, நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3 ஆயிரத்து 250 கிளைகளில், வங்கி சேவையை செப்டம்பர் 1ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். தமிழகத்தில் இந்த சேவையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்துள்ளார். 

இதில், குறைந்த பட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல், செல்ஃபோன் எண், ஆதார் எண் ஆகியவற்றை மட்டுமே அளித்து, கணக்கு தொடங்கலாம். அஞ்சலக வங்கியில், சேமிப்புக் கணக்கு, சில்லறை வணிக பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. 

"India post payment Bank" என அழைக்கப்படும் இந்த திட்டம், QR cards மூலம், பணம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு, ஏ.டி.எம். மற்றும் டெபிட் கார்டுகளுக்கு மாற்றாக இருக்கிறது. இந்த திட்டம் வெற்றியடைந்தால், ஏ.டி.எம்., கார்டுகளின் பயன்பாடு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என, பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

ஏ.டி.எம். கார்டுகளைப் போல் இல்லாமல், பயோ-மெட்ரிக் உறுதிப்படுத்துதல் முறையில், QR கார்டுகள் இயங்குவதால், ரகசியக் குறியீடோ அல்லது பின் எண்களோ தேவையில்லை. கணக்கு எண்ணை ஞாபகம் வைத்துக் கொள்ளும் கஷ்டம் இல்லாமல் வாடிக்கையாளர், அக்கவுண்ட்டை அணுக தனித்தன்மை வாய்ந்த பாதுகாப்பான மற்றும் வசதியான வழியை வழங்குகிறது. 

கார்டு உரிமையாளரை அடையாளம் காண, QR card ஆனது, QR CODE அல்லது Bar Code-யை கொண்டிருக்கிறது. எல்லா QR card -களும், வித்தியாசமாகவும், ஸ்மார்ட் போன்கள் அல்லது மைக்ரோ ஏ.டி.எம்.களின் மூலம், கணக்கு வைத்திருப்பவரின், அடையாளம் கண்டறியும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

பயோ-மெட்ரிக் எனப்படும் கூடுதல் அடுக்கு பாதுகாப்பு வழங்குவதால், QR card ஆனது, ஏ.டி.எம். கார்டை விட பாதுகாப்பானது. ஒரு வாடிக்கையாளரின் QR card  தொலைந்தாலோ அல்லது திருடு போனாலோ, அவரது பணம் கணக்கில் பாதுகாப்பாக இருக்கும். பணம் எடுக்க, பணப் பரிமாற்றம் செய்ய பில் கட்டணம் செலுத்த மற்றும் பணமில்லா ஷாப்பிங் செய்ய QR card-யை பயன்படுத்தலாம். 

ஒரு பணப் பரிவர்த்தனைக்கு, 25 ரூபாய் வீதம், வங்கி சேவையை வீட்டு வாசலுக்கு வந்து வழங்குகிறது. முதலில், வாடிக்கையாளரின் அடையாளம் QR card மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து, பயோ-மெட்ரிக் முறையில், கைரேகை சரிபார்ப்பு செய்யப்படுகிறது. 

இந்த 2 உண்மை சரிபார்ப்பு நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, வாடிக்கையாளரிடம் பணத்தை தபால்காரர் ஒப்படைப்பார். அஞ்சலக வங்கி சேவைகள், தபால்காரர்கள் மூலம், வீட்டிற்கே வந்து சேர்வதால், இதன் மூலம் தொலைபேசி கட்டணம், தேர்வுக் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஆன்-லைன் மூலம் பட்டுவாடா செய்ய முடியும். வரும் டிசம்பர் மாதத்திற்குள், ஒரு லட்சத்து 55 ஆயிரம் அஞ்சலகங்களில், வங்கி சேவை இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்