வெளிநாடு நிதியை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கேரள எம்.பி. மனுத்தாக்கல்
கேரள மாநிலத்திற்கு வெளிநாடுகள் வழங்கிடும், வெள்ள நிவாரண நிதியை பெற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.;
கேரள மாநில எம்.பி. பினாய் விஸ்வம் தாக்கல் செய்துள்ள மனுவில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி, வெளிநாடு அரசுகள், மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து இது போன்று பேரிடர் காலங்களில் இருந்து நிதியுதவிகளை பெற்று கொள்ளலாம் என விதிகள் உள்ளதாக கூறியுள்ளார்.
அதே சமயம், நிதியை பெற போவதில்லை என மத்திய அரசு கூறியுள்ளது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தமது மனுவில் தெரிவித்துள்ளார். வருகிற திங்கட்கிழமையன்று இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.