"கேரளாவிற்கு நிவாரண நிதியாக ரூ.700 கோடியா?" : மறுக்கிறது ஐக்கிய அரபு அமீரகம்

வெள்ள நிவாரண நிதியாக கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.;

Update: 2018-08-24 13:39 GMT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு  ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுவதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தமது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அப்படி ஒரு அறிவிப்பை தங்கள் நாடோ அல்லது தங்கள் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகமோ வெளியிடவில்லை என்று, டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகள் தெ​ரிவித்துள்ளனர். கேரளா வெள்ள நிவாரண நிதியாக தங்கள் நாட்டு மக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டு வருவதாகவும், அது நிறைவு பெற்ற பின்னரே கேரள அரசிற்கு எவ்வளவு நிதி உதவி வழங்குவது என்பது முடிவு செய்யப்படும் என்றும் தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்